Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (11), இரவு 11.00 மணியளவில், புதுக்குடியிருப்பு கைவேலி, மருதமடு பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த ஆறு பேர் கொண்ட கும்பலொன்று, வாள்கள் மற்றும் நாட்டுத்துப்பாக்கியுடன் சென்று, வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், குறித்த வீட்டிலிருந்த ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதுடன், நாட்டு துப்பாகிச் சூட்டுக்கு இலக்கான வாள்வெட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர், படுகாயம் அடைந்த நிலையில் கவலைக்கிடாமான நிலையில், அனுராதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டிலிருந்த செல்வகுமார் (வயது45), செ.குசேலகுமாரி (வயது 43), செ.கோபிநாத் (வயது 21) ஆகியோரே, வாள்வெட்டுக்கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார்,
இதன்போது வாள்கள் கொண்டு வெட்ட வந்த கும்பலைச் சேர்ந்த 4ஆம் வட்டாரம் கோம்பாவில்லினை என்ற முகவரியையுடைய, திருச்செல்வம் கபிலன் (வயது 22) என்ற இளைஞனே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி, படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதேவேளை, வாள்வெட்டில் காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிசிக்சைக்காக மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டில் காயமடைந்த தாயார் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தனர்.
9 minute ago
26 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
30 minute ago
36 minute ago