2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புதுக்குடியிருப்பு பகுதியில் ஆயுதம் தேடி தேடுதல் நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள பழைய இரும்பு விற்பனை நிலையத்துக்குள் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து, அதனை அகழ்வு செய்வதற்காக இன்றைய தினம் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

புதுக்குடியிருப்பு போலிஸாரால் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமாரிடம் அனுமதி பெறப்பட்ட நிலையில், காலை 10 மணி முதல் தற்சமயம் வரை ஆயுதங்கள் தேடிய அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் குறித்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இன்று மாலை வரை குறித்த தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று நிறுத்தப்பட்டுள்ளது.  மீண்டும் நாளை காலைஅகழ்வு பணி நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X