Editorial / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
ஒட்டுசுட்டான் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் வைத்து, திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கிளிநொச்சி - சாந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான, 3 பிள்ளைகளின் தந்தையெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் பகுதியில், கடந்த ஜூன் மாதப்பகுதியில், ஓட்டோ ஒன்றிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, புலிக் கொடி மற்றும் 20 கிலோகிராம் எடையுடைய கிளைமோர் குண்டு என்பன மீட்கப்பட்டன.
இதையடுத்தே, மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
14 minute ago
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
1 hours ago