2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பெண்ணுக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

மாங்குளம் பொலிஸ் பிரிவில் செல்வபுரம் - முறிகண்டியில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் வசிக்கும் வீட்டுக்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்திருந்த நபர்கள், மது போதையில் குறித்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அவதூறு படுத்தும் வகையில் குறித்த நபர்கள் செயற்பட்டமை தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் நாளை வாருங்கள் அவர்களை எச்சரித்து விடுகின்றோம் என தெரிவித்து அனுப்பி வைத்ததாக பாதிக்கப்பட்ட அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்காது, இவ்வாறு அலட்சியமாக நடந்து கொள்வது தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு தேடி பொலிஸாரின் உதவியை நாடும் பொது மக்கள் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றமை தொடர்பில் பொலிஸ் உயரதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .