2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொங்கல் உற்சவத்தில் இராணுவத் தளபதி

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

நேற்று (08) நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் வருடாந்தப் பொங்கல் உற்சவத்தில், மாலை 5 மணியளவில், இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், கோவில் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

அத்துடன், வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு கோவில் முன்றலில் வைத்து, உலருணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.

குறிப்பாக, இவர் வருகைதந்து கோவில் வளாகத்தில் நின்றபோது, விமானப்படையினர் கோவிலுக்கு ஹெலிகொப்டர் மூலம் மலர் தூவியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .