2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் இடமாற்றம் இரத்தானது

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.குகன்

 

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சின்னத்தம்பி கார்த்தீபனின் இடமாற்றம் வடமாகாண சுகாதார அமைச்சால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகராக கடமையாற்றி வந்த அவருக்கு, புளொட் கட்சியின் அழுத்தம் காரணமாக, மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகராக இடமாற்றம் வழங்கப்பட்டது.

எனினும், வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அவரது இடமாற்றம், வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் செயலாளரால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக, வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அது தொடர்பில் அனைத்து பிரதேச சபைகளிடமும் மாகாண சுகாதார அமைச்சால் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் விவரங்கள் கோரப்பட்டன.

இதற்கமைய, வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சின்னத்தம்பி கார்த்தீபனை விடுவிக்க தயாரென, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இவரது இடமாற்றத்துக்கு பொது மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து

குறித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரை அரசியல் அழுத்தத்துக்காக இடமாற்றம் முடியாதென்று ஆளுநரால் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சின்னத்தம்பி கார்த்தீபனின் இடமாற்றம் வடமாகாணச் சுகாதார அமைச்சால் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .