2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’பொன்னகர் பகுதியில் தொழில் வாய்ப்புகள் இல்லை’

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - பொன்னகர் பகுதியில் அதிகளகான குடும்பங்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி பெரும் கஷ்டங்களின் மத்தியில் வாழந்து வருகின்றன.

கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் பகுதியில் சுமார் 621 குடும்பங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தை அண்மித்து இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள், பழச்சாறு உற்பத்தி நிலையம் என்பன காணப்படுகின்றபோதும், மேற்படி மக்கள் தொகையில் 1000க்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதனால் கூடுதலான குடும்பங்கள் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் நுன்நிதிக்கடன் நிறுவனங்களிடமிருந்து கடன்களை அதிகூடிய வட்டிக்கு கடன்களைப் பெற்று அதனை மீளச்செலுத்த முடியாமல் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றன

இதனால் பலர் தற்கொலை முயற்சிகளில் கூடஈடுபட்டுள்ளனர் என்றும் பிரதேச பெண்கள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு குறித்த பிரதேசத்தின் குறைந்தளவு நிலப்பரப்புகளை கொண்ட காணிகளிலேயே இந்த மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதனால் சுய தொழில் நடவடிக்கை எதனையும் செய்யமுடியாத நிலையும் காணப்படுகின்றது என்றும் இவ்வாறான குடும்பங்கள் வருமானமற்ற குடும்பங்களாக காணப்படுவதுடன், அதிக தேவைகளை கொண்டவர்களாக காணப்படுவதனால் இவ்வாறு கடன்களைப்பெற்று பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X