2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பொலிஸார் மீது கல்வீச்சு: 16 பேர் கைது

சண்முகம் தவசீலன்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் மூன்று  பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும், 2 பெண்கள் உட்பட  16 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பொலிஸாரும்  முல்லைத்தீவு – வெலியோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் போதைப்பொருள்  விற்பனை  செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த பொலிஸார்  சுற்றிவாளைப்பை மேற்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்த நபரை கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து, போதைப்பொருள் விற்பனை செய்த நபரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இணைந்து குறித்த பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பொலிஸாரும்,  முல்லைத்தீவு - வெலியோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 1 6  பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .