Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 26 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், கியூடெக் கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், எதிர்ப்புப் பேரணியொன்று கிளிநொச்சியில் இன்று (26) காலை நடைபெற்றது.
குறித்த பேரணி, கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமாகி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து நிறைவு பெற்றது.
இதன்போது, மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மது பாவனையால், குடும்ப வன்முறைகளும் முரண்பாடுகளும் கிராமங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன எனவும், எனவே அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பேரணியில், சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .