2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிணக்கிலுள்ள காணிக்கு அடிக்கல் நாட்ட அனுமதி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் பிணக்கிலுள்ள காணி ஒன்றில் விளையாட்டு மைதானத்துக்கு வேலியடைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இக் கிராமத்தில் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றினை பொதுத்தேவைக்கென சுவிகரிக்க மேற்கொள்;ளப்பட்ட நடவடிக்கையையடுத்து, காணி உரிமையாளரான பெண் ஒருவரால் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்;யப்பட்டது.

இதையடுத்து, இது குறித்த பிணக்கு தீர்க்கப்படும் என  பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டிருந்;தது.
இதேவேளை, குறித்த காணிக்கு மற்றுமொருவர் உரிமை கோரி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், குறித்த காணி அரச காணி எனவும் அதனை விளையாட்டு மைதானத்துக்கு வழங்குவதற்கான அதிகாரம் தனக்குள்ளதாக தெரிவித்து, செவ்வாய்க்கிழமை (23) குறித்த காணியில் சுற்று வேலியமைப்பதற்கான அடிக்கல்லினை நாட்டுவதற்கு ஒட்டுசுட்டான் காணி அலுவலர் அனுமதித்துள்ளார் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஓட்டுசுட்டான் பிரதேச செயலாளரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .