2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்குமாறு கோரி உண்ணாவிரதம்

Menaka Mookandi   / 2016 ஜூன் 27 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன், ரொமேஸ் மதுசங்க

வட மாகாணத்தில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையமானது, வட இன்று திங்கட்கிழமை (27), தொடர் உண்ணாவிரதப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்காக வவுனியா வர்த்தக சங்கத்தினரின் கடைகள் திறந்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினரது கடைகள் பூட்டப்பட்ட நிலையிலேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனை சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.கே.மஸ்தான், வட மாகாணசபை உறுப்பினரான ஏ.ஜயதிலக்க, ஸ்ரீ டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் கா.உதயராசா உட்பட பல அரசியல்வாதிகளும் இந்த  உண்ணாவிரப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இப்போராட்டத்துக்குரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில், தொடர்ந்தும் உண்ணாவிரத்தில் ஈடுபடப்போவதாகவும் உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .