Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் நேற்று (10) உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் ஜேசு மேரி என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
2009ஆம் ஆண்டு, மாத்தளன் பகுதியில் தனது மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில், தன்னுடைய மகனைத் தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர், நேற்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில், இந்தத் தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த 18 உறவுகள் உயிரிழந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
57 minute ago