2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வுகளால் குளங்களுக்கு ஆபத்து

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு, வன்னேரிக்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்கின்ற மணல் அகழ்வால், அப்பகுதிகளில் உள்ள குளங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளனவெனத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் த.இராஜகோபு, குளங்களின் கீழான மணல் அகழ்வுகள் தொடருமானால், மாவட்டத்தின் எதிர்கால நீர்ப்பாசனம் கேள்விக்குறியாகுமெனவும் கூறினார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், நேற்று  (03) நடைபெற்ற சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சட்ட ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இரணைமடுக் குளத்தின் ஆற்றுபடுகைகளில் தொடர்கின்ற மணல் அகழ்வால், குளத்தின் கீழான கட்டுமானங்கள் அழிவடைந்து செல்கின்றனவெனவும் இரணைமடுக் குளத்தின் நீர் பரவாமல் அமைக்கப்பட்ட அணைகளும் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, வன்னேரிக்குளத்தின் தென் பகுதியில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வால், வன்னேரிக் குளத்துக்கு வருகின்ற நீர் திரும்பிச் செல்வதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .