2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மணல் அகழ்வைத் தடுப்பதற்கு 13 இடங்களில் காவலரண்கள்

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி – இரணைமடு, அதனை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள 13 இடங்களில், பொலிஸ், இராணுவம், விமானப்படையினர் ஆகியோரின் காவலரண்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடிக்கடி களவிஜயம் மேற்கொள்வதற்காக, கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு பொலிஸ் உத்தியோத்தரை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிராந்தியங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில், இன்று (04), சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .