Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தமக்கு உதவி செய்ய மறுத்த பாலம் புனரமைக்கும் ஒப்பந்தக்காரர்களின் களஞ்சிய அறைகள், மணல் கொள்ளையர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவமொன்று, முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பிரதான வீதியில், நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
அம்பகாமம் பிரதான வீதியில் பாலம் திருத்தும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், அவ்வீதிக்கு அருகில் தற்காலிக வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (18) இரவு, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பரொன்று, அந்தத் தற்காலிக வீதியில் நிரப்பப்பட்டிருந்த மணலில் புதையுண்டுள்ளது. இதன்போது, வீதியில் பாலம் புனரமைப்பு செய்யும் ஒப்பந்ததாரர்களிடம், டிப்பரில் வந்தவர்கள் உதவி கோரியுள்ளனர்.
அதற்கு ஒப்பந்ததாரர்கள் மறுத்ததையடுத்து ஆத்தரமடைந்த மணல் கொள்ளையர்கள், ஒப்பந்ததாரர்களின் களஞ்சிய அறைகளைச் சேதப்படுத்தியதுடன், அவர்களுக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரின் வீட்டுக்குச் சென்ற மணல் கொள்ளையர்கள், அவருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, நேற்று (19) காலை ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார், டிப்பரில் வந்தவர்களில் ஒருவரைக் கைதுசெய்ததுடன், டிப்பரில் இருக்கும் மணலை அந்த இடத்தில் கொட்டிவிட்டு, டிப்பரை எடுத்துச் செல்லுமாறும் பணித்தனர்.
1 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago