Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேச செயலகத்தின் 2021 ஆண்டுக்கான கலாசார விழா, ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆண்டு தோறும் மன்னார் மாவட்டத்தின் சிறப்பை எடுத்துறைக்கும் விதமாக உருவாக்கப்படும் “மன்னல்” பிரதேச மலர் இம்முறையும் வெளியிடப்படவுள்ளது.
இதற்காக மன்னார் பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களின் ஆக்கங்கள் கோரப்படுகின்றன.
அவை, மன்னார் மாவட்டத்தின் சிறப்பையும் கலாசார, பண்பாட்டு அம்சங்களையும் எடுத்துக் கூறக்கூடிய ஆக்கங்களாகவும் நடு நிலைத் தன்மையுடையதாகவும் அமைந்திருதல் வேண்டும்.
ஆக்கங்களை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் மன்னார் பிரதேச செயலகத்தில் நேரடியாகவோ அல்லது கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மன்னார் எனும் முகவரிக்கோ அல்லது abimahathy18@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், பிரதேச மலர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, “மன்னல்” நூலில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago