2025 மே 21, புதன்கிழமை

மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமான இன்று வெள்ளிக்கிழமை (30) மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆராம்பமானது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையிலும் உரிய தீர்வு வழங்காத நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள் சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களையும் விடுவிக்க கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்கள், உறவினர்கள் அருட்தந்தையர்கள், மத குருக்கள், சமூக ஆர்வளர்கள், மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

போராட்டத்தின் பின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .