2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னாரில் சந்திப்பு

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டச் செயலாளருக்கும் மன்னார் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட பயிலுனர் செயற்றிட்ட உதவியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (30) முற்பகல் 9 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, தமக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அகில இலங்கைச் செயற்றிட்ட உதவியாளர் சங்கம் சார்பாகவும் மன்னார் மாவட்டச் செயற்றிட்ட உதவியாளர்கள் சார்பாகவும், மாவட்டச் செயலாளரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

மகஜரை பெற்றுக்கொண்டு கருத்துரைத்த மாவட்டச் செயலாளர், கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், செயற்றிட்ட உதவியாளர்கள் நியமனம் வழங்கி வைக்க உத்தேசிக்கப்பட்ட போது, தேர்தல் ஆணைக்குழுவால் அந்த நியமனங்கள் ஒத்திவைக்கப்பட்டன என்றார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்க வேண்டிய மகஜர் உடனடியாக அனுப்பி வைக்கப்படுமெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .