எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோரமோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியை அதன் உரிமையாளர் துப்பரவு செய்துள்ளபோது குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றைத் துப்பரவு செய்யும் போது ஆபத்தை விளைவிக்கும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாகக் காணப்பட்ட குறித்த கிணற்றுக்குள் அதிகமான வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்புக்கு மேலதிகப் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிணற்றுள் உள்ள அனைத்து வெடிபொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றி அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago