Niroshini / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு - திட்ட அமர்வின் போது கலவரத்தில், இரு உறுப்பினர்கள் காயமடைந்துள்ள நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பான கூட்டம், நேற்று (20) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இதன்போது, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம் முஜாஹீரா அல்லது உப தவிசாளராக இருந்த முஹமட் இஸ்ஸதீனா என்ற பாரிய இழுபறி நிலைமை, சபை உறுப்பினர்களுக்கு இடையில் காணப்பட்டது.
இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கலவரமாக மாறிய நிலையில், பிரதேச சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், மன்னார் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா, இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர் காமநாதனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, மேசையில் இருந்த ஒலிவாங்கியை தூக்கி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர் காமநாதன் மீது தாக்கி, தீய வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதன்போது குறித்த ஒலிவாங்கியை பறித்து தாக்க முயற்சி செய்த போது, சபையில் இருந்தவர்கள் பிடித்து சமாதானப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து, மன்னார் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர், சபை கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
மன்னார் பிரதேச சபையின் 42ஆம் மற்றும் 43ஆம் சபை அமர்வுகளில், சபையின் தவிசாளர் யார் என்ற சந்தேகம் எழுந்ததால், அமர்வுகளில் இருந்து எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில், நேற்று (20) நடைபெற்ற மன்னார் பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட அமர்வின் போது ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெண் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர் காமநாதனுமன் ஆகியோர் காணமடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
19 minute ago
32 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
32 minute ago
10 Nov 2025