Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில், இன்று (5) தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று (5) காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை வாக்களிப்புகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் புத்தளத்தில் இடம்பெயர்ந்த 5,807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றன.
புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நடைபெற்றது.
தேர்தல் கடமைகளில், 1,202 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர். காலையில் வாக்களிப்புகள் மந்தகதியில் இடம்பெற்ற போதும், பின்னர் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் தேர்தல் கடமைக்காக 700 பொலிஸார் மற்றும் 40 அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும் 60 ஆயிரத்து 582 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு விகிதத்தில் 76.83 வீதமாக உள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மேகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
“மேலும், தற்போது வரை தேர்தல் தொடர்பில் 30 சிறிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. உடனடியாக குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனவும், அவர் தெரிவித்தார்.
வன்னி மாவட்டத்தில் 17 கட்சிகளும், 28 சுயேச்சைக் குழுக்களும் இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய வன்னி மாவட்டத்தில் தேர்தல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
57 minute ago