2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னியா குளத்துக்கான தனியான கமக்கார அமைப்பு உருவாக்கவும்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள மன்னியா குளத்துக்கான தனியான கமக்கார அமைப்பு உருவாக்குமாறு விவசாயிகளினால் அக்கராயன் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருமளவு மானாவாரி நெற்செய்கை நிலங்களில் விவசாயிகள் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக, தனியான கமக்கார அமைப்பு உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் விவசாய முயற்சிகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும், விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, வன்னேரிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ளடங்குகின்ற மன்னியாகுளம் சூழலில் பெருமளவு நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கைக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .