2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’மருதங்குளப் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு’

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்ரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்தாண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த மருதங்குளத்தைப் புனரமைப்பதற்குரிய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம், அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களம்,மேற்படி குளத்துக்கான நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதாலும் குளத்தின் வான்பகுதியில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாகவுமே உடைவு ஏற்பட்டதாகவும் கூறியது.

தற்போது இந்தக் குளத்தை புனரமைப்பதற்கு 125 மில்லியன் ரூபாய் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த திணைக்களம், அதனை புனரமைப்பதற்கான வேலைகளை முன்னெடுக்கப்பட்டுவருவதாகத் கூறினார்.

இதன்போது குளத்தின் நீர்க் கொள்ளவை மேலும் இரண்டு அடியால் அதிகரிப்பதுடன், வான்கதவுகளை அமைப்பதற்கான மதிப்பீடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளனவெனவும், திணைக்களம் கூறியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .