Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம்பாஸ்கரன்
கிளிநொச்சி - கோணாவில் பிரதேசத்தில், பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலகிய அல்லது ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களின் தொகை அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - கோணாவில் பிரதேசத்தில், சுமார் 1,088 குடும்பங்களைச் சேர்ந்த 4,336 பேர் வசித்து வருகின்ற நிலையில், அதில் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றி, வறிய குடும்பங்களாகக் காணப்படுகின்றன.
குறிப்பாக, இந்தப் பிரதேசத்தின் வாழும் அதிகளவான குடும்பங்கள், அக்கராயன் குளத்தின் கீழான விவசாயப் பயிர்ச்செய்கைகளின் போது, தொழில் வாய்ப்புகளை பெறுகின்ற குடும்பங்களாகக் காணப்படுகின்றன.
இதை விட, விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள், தற்போதைய வரட்சி காரணமாக, தொழில் வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளன. கோணாவில், யூனியன்குளம், புதியகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற அநேகமான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றி காணப்படுகின்றன.
இவ்வாறான பிரதேசங்களில், நுண்நிதிக் கடன்களைப் பெற்று, அவற்றை மீளச்செலுத்த முடியாமல் பெருமளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான வறுமை நிலை காரணமாக, இப்பிரதேசங்களில் இருக்கின்ற கூடுதலான சிறார்கள், பாடசாலைகளுக்குச் செல்லாத நிலை காணப்படும் அதேவேளை, அக்கராயன் மகா வித்தியாலயம், கோணாவில் மகா வித்தியாலயம், யூனியன்குளம் பாடசாலை, கோணாவில் ஆரம்பப் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் கணிசமான மாணவர்கள், ஒமுங்கற்ற வரவுகளைக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், இவ்வாறான சிறார்களை பாடசாலைகளில் மீளக் கற்றலில் இணைக்க முயல்கின்ற போதும், அந்தக் குடும்பங்களுடைய வறுமை நிலை தொடர்பில், எவரும் கவனம் செலுத்துவதில்லை என்றும், பல்வேறு தரப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago