Freelancer / 2022 நவம்பர் 05 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள்,நிகழ்ச்சிகள் சகல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பல பாடசாலைகளில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் உருவாகியுள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய தீமையான விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள், சுகாதாரத் துறையினரும் , கல்வி துறையினரும் இணைந்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பாடசாலை சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் சிகிச்சைகளை நாடிவரும் ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார். (R)
18 minute ago
22 minute ago
23 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
23 minute ago
36 minute ago