Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு நகரின் கரைச்சிக்குடியிருப்பு பகுதியிலுள்ள பிரபலமான பாடசாலையொன்றில் கல்விகற்கும் மாணவிகளுக்கு தங்கள் அந்தரங்க உறுப்பைக் காண்பித்த படையினர் இருவரை பிரதேச இளைஞர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை சென்று வரும் மாணவிகளுக்கு இனந்தெரியாத சிலர் தங்கள் அந்தரங்க ஆண் உறுப்பைக் காண்பித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்திடம் முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம மக்களாலும் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரைச்சிக்குடியிருப்பு பிள்ளையார் கோவிலடிப் பகுதியில் சிவில் உடையில் இன்று சைக்கிளில் சென்ற 59ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் வீதியால் சென்ற பாடசாலை மாணிகளுக்கு தங்கள் ஆண் உறுப்பைக் காண்பித்துள்ளார்கள். இதனை மாணவிகளின் பெற்றோர்களும் கண்டுள்ளார்கள். அந்தவகையில், பிரதேச இளைஞர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேச இளைஞர்கள் படைச் சிப்பாய்களை பிடித்து வைத்துக்கொண்டு முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொஸிர் படைச் சிப்பாய்களையும் அவர்கள் சென்ற சைக்கிளையும் முல்லைத்தீவு பொலீஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள்.
இந்நிலையில், பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சி. லோகேஸ்வரன், த. அமலன் ஆகியோர் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் ஏற்கெனவே இவ்வறான சம்பவம் தொடர்பில் மக்கள் முறையிட்டும் பொலிஸாரும் இராண்வப் பொலிஸாரும் அசமந்த போக்கில் செயற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியிருந்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago