Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 20 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய், கோட்டக்கேணி பிள்ளையார் கோவில் முதல் மணல் இறக்கம் பகுதி வரையான பொதுமக்களின் மாநாவாரி விவசாயக் காணிகளை எல்லையிடும் பணிகள், கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகாவலி எல் வலயச் செயற்பாட்டாளர்களாலேயே, இந்த அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, எல்லைக் கற்களும் நடப்பட்டு வருகின்றன என்று, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில், வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம், காணி உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து, அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட அவர் கூறியதாவது,
“கொக்குத்தொடுவாய் பிரதேச மக்கள், கடந்த 1983ஆம்ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெயர்ந்ததை அடுத்து, அம்மக்களுக்குச் சொந்தமான 2,524 ஏக்கர் காணிகள், வெலிஓயா பிரதேச பகுதியிலிருந்து அபகரிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், மீண்டும் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கில், அளவீட்டுச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
“கொக்குத்தொடுவாய் பகுதியில், 3 கிராம அலுவலகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இவற்றில் வாழ்கின்ற மக்கள், பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த மக்களின் நீர்ப்பாசனக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். காணி அளவீடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களின் சொந்தக் காணிகள், மக்களிடமே ஒப்படைக்கப்படல் வேண்டும். தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து, தென்னிலங்கை மக்களுக்குக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .