Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தமிழ் மக்களின் மாற்றுத்தலைமை தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டுமென, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு - கைவேலியில் உள்ள கடசி தலைமை செயலகத்தில், நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஆட்சி மாற்றத்தின் பின்னர், தாயகப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற நம்பிக்கையீனங்கள், சந்தேகங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பெரும்பான்மை இன மக்களுக்கு இடையிலும் சிறுபான்மையின மக்களுக்கு இடையிலும், சந்தேகமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக, மக்கள் மத்தியில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளனவெனத் தெரிவித்த அவர், தங்கள் மக்கள் இனவாதிகள் அல்லரெனவும் தங்களின் அபிலாசைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான், தங்களை அர்ப்பணித்து செயற்படுகிறார்களெனவும் கூறினார்.
பெரும்பான்மையினம் ஒரு போதும் சிறுபான்மை இனத்தை அடக்கி ஆழ்வது என்பது, ஒரு ஜனநாயகத்தின் செயற்பாடாக கருதமுடியாதெனத் தெரிவித்த அவர், ஆட்சி மாற்றம் என்பது, அனைத்து மக்களுக்கும் உரியதெனவும் கூறினார்.
இந்த அரசாங்கம், தமிழ்த் தரப்புடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டுமெனத் தெரிவித்த அவர், அந்த நிலைமை உருவாக்கப்படுமாக இருந்தால், அரசாங்கத்தின் மீதான சந்தேகமான தன்மைகளை தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் செய்ய முடியுமெனவும் கூறினார்.
இந்த நிலையில், தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைமைத்துவங்கள் இங்கு வந்து, மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்கு, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வருகின்றார்களெனவும் கூறினார்.
எனவே, அனைவரும் ஒன்றுபட்டு, எதிர்வரும் காலங்களில், தங்கள் தலைமைத்துவத்தை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
20 minute ago
28 minute ago