Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
“மாவீரர் தின நிகழ்வுகளில் அரசியல் கட்சியாக நுழைந்து கலந்துகொள்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என, மாவீரர் தினப் பணிக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், ஊடகங்களுக்கு இன்று (16) அக்குழு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளன. இவற்றில், அரசியல் கட்சியாக நுழைந்துகொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது. சாதாரண மக்களாக வரலாம். அவர்களின் பாதுகாப்பு உறுப்பினர்கள் கூட ஆயுதங்களுடன் இந்த இடத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
“வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரர்களின் வித்துடல்களும் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களை தனித்தனியாக அழைக்க முடியாத சூழ்நிலை காரணமாக, ஊடகங்கள் ஊடாக அழைப்பு விடுக்கின்றோம்” என, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
5 hours ago
5 hours ago