Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இருந்து நேற்று (15) மீட்கப்பட்ட வெடிபொருள்கள், விசேட அதிரடிப்படையினரால் இன்று (16) செயலிழக்கம் செய்யப்பட்டன.
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஆதிவைரவர் அரிசி ஆலைக்கு அருகில், அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர், கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்காக, நேற்று (15) நிலத்தைச் சுத்தப்படுத்தினார்.
இதன்போது, அந்தப் பகுதியில் வெடிபொருள்கள் இருப்பதை அவதானித்த உரிமையாளர், இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், நீதிமன்ற உத்தரவுக்கமைய, டி.என்.டி ரக வெடிபொருள்கள், சி-4 வெடிபொருள்கள், 81 மிமீ எறிகணை - 7, கிளைமோர் குண்டு – 1, 40 மிமீ குண்டு – 1, தமிழீழ விடுதலைப் புலிகளால் நவீனமாக தயாரிக்கப்பட்ட வாகன மைன்ஸ் உள்ளிட்ட வெடிபொருள்களை மீட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago