2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’மீள்குடியேற்றத்துக்கு முட்டுக்கட்டை’

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

காஞ்சிரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்துக்கு வனவளத்திணைக்கள அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட தலைமை வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வனவள அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (25) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டை,  நாவலர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும், தாங்கள் மீளக்குடியமர வனவள அதிகாரிகள் தடையாக இருப்பதாகத் தெரிவித்து, ஜூன் 21ஆம் திகதி முதல் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .