Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
இருபாலை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர், சிறுவர் தின நிகழ்வுகள், நேற்று மாலை 5 மணிக்கு, கட்டப்பிராய் முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இருபாலை கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பாக்கியராசா பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பதிகாரி இரட்ணசிங்கம் அமலன், கிராம உத்தியோகத்தர் எம்.ஆர்.ஜெயதரன், சமுர்த்தி உத்தியோகத்தர் என்.உமாகாந்தன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.மாதவன், கிராம உத்தியோகத்தர் திருசெல்வம் ஜேசுதாஸ், நல்லூர் லயன்ஸ் கழக தலைவர் சின்னத்துரை இலட்சுமிகாந்தன், மக்கள் ஆதரவு மய்யத்தின் பணிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன், உதயம் கலாசார சங்கத்தின் இணைப்பாளர் தியாகராஜா நிசங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கிராம நண்மைக்காக உழைத்த முதியோர்கள், சமூக ஆர்வலர்கள் கௌரவிகப்பட்டதுடன், சிறுவர்களுக்கான பரிசில் பொருள்களும் வழங்கிவைக்ப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago