Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தொடர்ந்தும் மன்னார் மாவட்டக் கல்வி வலயம் முதல் நிலையில் இருப்பதை நினைத்து மகிழ்வடைகிறேனென, மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.சுகந்தி செபஸ்தியன் தெரிவித்தார்.
மன்னார் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், “புரட்டாதி முழு நிலாக் கலை விழா” நிகழ்வு, மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று (24) காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், கல்வியோடு சேர்ந்து ஒழுக்கமும் ஞானமும் மாணவர்களுக்குள் இருக்கின்ற திறன் வெளிப்பாடும்போது தான், சமூகத்தில் அவர்களை நன்மதிப்புள்ளவர்களாக மாற்றுகின்றதெனத் தெரிவித்தார்.
ஒவ்வெரு வருடமும் இடம்பெறுகின்ற இந்தப் புரட்டாதி முழு நிலாக் கலை விழா நிகழ்வானது, தனது தலைமையிலே நடைபெறுவது வழமையெனத் தெரிவித்த அவர், ஆனால் இம்முறை தனது தலைமை இல்லாமல், மன்னார் வலயக் கல்விப் பணிமனை அலுவலகர்கள் நீங்களாகவே உணர்ந்து நல்ல முறையில் இந்த விழாவை நடத்தியுள்ளீர்களெனவும் கூறினார்.
குறித்த நிகழ்வில், பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, களைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025