Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 16 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் பொலிஸ் நிலையம் நேற்று (15) மாலை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் திறந்து வைக்கப்பட்டது.
தற்காலிகமாக இயங்கி வந்த முருங்கன் பொலிஸ் நிலையத்துக்கான நிரந்தர கட்டடமானது 5 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் திணைக்களத்தின் 4.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன , வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுர அபய விக்ரம, மற்றும் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உள்ளிட்ட மன்னார் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பொலிஸ் நிலைய திறப்பு விழா நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago