Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 28 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கான முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை சேவைகள், இன்று (29) தொடங்கவுள்ளதாக முல்லைத்தீவு பஸ் டிப்போ தெரிவித்துள்ளது.
கொவிட்-19 நெருக்கடி காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தச் சேவை, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமாமன பஸ், அதிகாலை 5.30 மணிக்கு கொக்கிளாயில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு சென்று மீண்டும் கேப்பாபிலவு ஊடாக தண்ணீரூற்று ஒட்டுசுட்டான் வழியாக நெடுங்கேணி சென்று வவுனியா-புத்தளம்-நீர்கொழும்பு வளியாக கொழும்பைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ், கொழும்பில் இருந்து மறுநாள் முல்லைத்தீவு நோக்கி அதே வழித்தடத்தில் பயணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
16 May 2025