2025 மே 22, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் மொட்டுவின் பரப்புரை

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் அணித் தெரிவும் மக்கள் சந்திப்பும், முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நேற்று (04) நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட இணைப்பாளர் துசார தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் செயலாளர் மகேஸ் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் மக்களின் வீடுகளுக்குச் சென்று, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ யாரை தெரிவு செய்கின்றாரோ, அவருக்கு வாக்களிக்க வேண்டுமெனப் பரப்புரைகளை செய்துள்ளதுடன், துண்டு பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, கரைதுறைப்பற்று பிரதேசத்திலும், மக்கள் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினமும் கலந்துகொண்டார்.

இதன்போது, தற்போது இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X