Freelancer / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் நாட்டில் உள்ள பௌத்த நூலக நிதிப்பங்களிப்பில் 125 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள 68 ஆவது படைப்பிரிவின் 2 ஆவது படைத்தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிங்கப்பூர் நாட்டின் பிரதான சங்க நாயக்கராக இருக்கின்ற கடுகண்ணாவ பாரமித்த தியான நிலையத்தின் தலைவருமாகிய வெல்லம்வெல றஜமாக விகாரையின் விகாரபதியுமான வெல்லம்வெல தம்மரத்தின நாயக்கதேரர் கலந்துகொண்டார்.
மேலும், கொழும்பு றாஜகிரிய வித்தியாலத்தின் பௌத்த மாணவர் சங்க தலைவர் கவகிரியே பிரேமரத்தின சங்கநாய அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சேய் ரணசிங்க மற்றும் 68 ஆவது படைஅணி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் றொகான் பென்னம்பெருமா 68இன் 2ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் களபதி உள்ளிட்ட படை அதிகரிகாரிகள் கலந்துகொண்டுள்ளார்கள்.
மிகவும் வறிய குடும்பங்களான 125 குடும்பங்களுக்கு போசாக்கு நிறைந்த உலர் உணவுபொதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. (R)
39 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
40 minute ago