2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 6,000 பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்ரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், 6,246 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழந்து வருவதாக, மாவட்டச்செயலக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக, அதிகளவான பெண்கள், வாழ்க்கைத் துணையை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் மாவட்டச்செயலகத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில், 5,252 பெண்கள் விதவைகளாக காணப்படுகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதில் அதிகமாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில், அவ்வாறான 1,914 குடும்பங்கள் காணப்படுகின்றன. புதுக்குடியிருப்பில், அவ்வாறான 1,729 குடும்பங்கள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X