Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வடக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சால், முல்லைத்தீவு மாவட்டக் கல்வி வலயத்தைச் சேர்ந்த அதிபர்களை துணுக்காய் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளமை குறித்து, தடுத்து நிறுத்துமாறு, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினத்தால், வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பல அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், முல்லைத்தீவு கல்வி வலயத்தைச் சேர்ந்த 4 அதிபர்களை துணுக்காய் கல்வி வலயத்துக்கு நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ்விடயம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினத்தால் வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரினதும் வடமாகாண ஆளுனரினதும் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த அதிபர்களை அந்தந்த இடங்களில் உள்ள கல்வி வலயங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு, ச.கனகரத்தினம் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .