Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவின் நந்திக் கடல், சின்னாறு என்பன மழை காலத்தில் வேகமாக உடைப்பெடுத்து பெருங்கடலுடன் கலப்பதன் காரணமாக ஜூன், ஜூலை மாதங்களில் முல்லைத்தீவு நகர் அதனை அண்டிய கிராமங்களில் குடிநீர் நெருக்கடி ஏற்படுவதாக, பொது அமைப்புகளால் தெரிவிக்கப்படுகின்றது.
மாரி மழை காலங்களில் இயன்றளவு நந்திக் கடல், சின்னாறு என்பவற்றை கடலுடன் கலக்காமல் கூடுதலான நீதை தேக்கி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
நந்திக் கடல் துப்புரவு செய்யாததன் காரணமாக விரைவாக கடலுடன் கலக்கின்றது. சின்னாறும் வேகமாக உடைப்பெடுத்து கடலுடன் கலக்கின்றது. இவை இரண்டிலும் கூடுதலான நீரை சேமிப்பதன் மூலம் முல்லைத்தீவு நகரம் அதனை அண்டிய செல்வபுரம் கிராமங்களின் குடிநீர் நெருக்கடியை தீர்க்க முடியும்.
அதாவது, கிணறுகளின் நீர் மட்டத்தினை பேண முடியும். தற்போது முல்லைத்தீவு நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் தண்ணிரூற்றுப் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நகரத்துக்கான குடிநீர்த் திட்ட வேலைகள் இடம்பெறுகின்றன.
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago