2025 மே 21, புதன்கிழமை

முல்லைத்தீவு விபத்தில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

இன்று காலை, கொக்குளாய் - முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் கூலர்வகை வாகனம் ஒன்று வீதியை விட்டுவிலகி, தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில், வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளார்

புத்தளம் - அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வர்ணகுலசூரிய பிறேமசிறி என்பவரே, விபத்தில் உயிரிழந்தார்.

கொக்குளாய் – முகத்துவாரம் பகுதியில், கடற்றொழில் செய்யும் தெற்கைச் சேர்ந்தவர்களின் குறித்த வாகனம் சிலாவத்தை பகுதியில் ஐஸ் ஏற்றுவதற்காக சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதியின் துக்கமின்மை காரணமாகவே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .