Niroshini / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
நிகழ்நிலை வகுப்புகளால் மாணவர்கள் முழுமையான கல்வியை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் முல்லைத்தீவில் இல்லை என, முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் இ.தமிழ்மாறன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தின் நிலைவரம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தரைத்த அவர், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 66 பாடசாலைகள் இயங்குகின்றன எனவும் அவற்றில் 22,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்றும் கூறினார்.
கல்வி, பிற பாட விதானச் செயற்பாடுகளில் கடந்த காலங்களில் நல்ல பெறுபேறுகளை முல்லைத்தீவு கல்வி வலயம் வெளிப்படுத்தி வந்திருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
'கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் பாடசாலைகள் மூடப்பட்டு, மாணவர்கள் தற்போது நிகழ்நிலை வகுப்புகளில் கல்வி கற்று வருகின்றனர். எமது வலயத்தில் 40 வீதமான மாணவர்களுக்குத்தான் நிகழ்நிலை வகுப்புகளில் கற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
'ஏனைய மாணவர்களுக்கு நிகழ்நிலை வகுப்புகளில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இது ஒரு பாதிப்பினையே கல்வி கற்றலில் மாணவர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய சூழல் மாறும்போதுதான் மாணவர்கள் எல்லோரும் ஒரே நிலையில் கல்வி கற்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்' எனவும், அவர் தெரிவித்தார்.
13 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
3 hours ago