Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள், கடந்த மூன்று நாள்களாக தொழிலுக்குச் செல்லவில்லை. இடர்முகாமைத்துவப் பிரிவின் எச்சரிக்கையை அடுத்து கடலுக்குச் செல்லவில்லை.
வழமையாக நவம்பர், டிசெம்பர் மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு இலங்கைத் தீவின் மழையுடன் கூடிய காலநிலையினைக் கருத்திற்கொண்டு அடிக்கடி கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கைகளை விடுத்த வண்ணம் இருக்கும்.
இதன் காரணமாக, கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் உணவு நெருக்கடியினை எதிர்கொள்வார்கள். கடந்த பத்தாண்டுகளில் கடன்களைப் பெற்று படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்து நாள்தோறும் கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் ஒருநாள் கூட தொழிலுக்குச் செல்லாவிட்டால் வீடுகளில் உணவு நெருக்கடி ஏற்படுகின்ற நிலைமை காணப்படுகின்றன.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கடற்றொழிலாளர்களுக்கான உலர் உணவுப்பொருள்கள் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏற்கெனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்கின்ற 5,000க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் போரினாலும் ஆழிப் பேரலையினாலும் பேரழிவுகளைக் கண்டுள்ள நிலையில் உலர் உணவுப்பொருள்கள் பெற்றுக் கொள்வதன் மூலம் தற்போதுள்ள உணவு நெருக்கடி ஓரளவுக்குத் தீரக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago