2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’மொட்டு கட்சி மக்களிடம் சண்டித்தனம் காட்டுகின்றது’

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மொட்டுகட்சியினர் எமது மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக பணபலத்தையும், சண்டித்தனையும் காட்டி அரச வளங்களையும், படைகளையும் பயன்படுத்தி, இந்தத் தேர்தலை முன்னெடுப்பதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

வவுனியா - கள்ளிக்குளம் பகுதியில், இன்றயதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இம்முறை தேர்தலில் அதிகமான கட்சிகள் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகின்றன எனவும் கடந்த காலங்களில் நாம் ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்துதான் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்தோமெனவும் அப்படியிருந்தும் ஏனைய கட்சிகளுடன் பிரச்சினைகளை ஏற்படுத்தாது  ஒவ்வொருவரது ஐனநாயக உரிமைகளை பேணி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தோமெனவும் கூறினார்.

இந்தத் தேர்தலில் மொட்டு கட்சியினர் அராயகப் பார்வையில் எமது மக்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொள்கின்றார்களெனத் தெரிவித்த அவர், வெளிமாவட்டத்தில் இருந்து இங்கு வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனரெனவும் கூறினார்.

இந்தப் பகுதியில் உள்ள தமிழ், முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்காக பணபலத்தையும் சண்டித்தனையும்காட்டி அரச வளங்களையும் படைகளையும் பயன்படுத்தி இந்தத் தேர்தலை முன்னெடுக்கின்றார்களெனவும், ரிஷாட் தெரிவித்தார். 

“நூறு வீதம் வரம்பு மீறியே இந்த விடயங்கள் நடக்கின்றது. அதனை தேர்தல் ஆணையகமும் பொலிஸாரும் பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கின்றனர்.  ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் வாகனங்களில் பதாதைகளைக் காட்சிப்படுத்திச் சென்றால்  பலமுறை நிறுத்தி சோதனை செய்கின்றார்கள். ஆனால் அரச கட்சியினர் பல வாகனங்களில் அவ்வாறு செல்கின்றார்கள். அதனை சோதனை செய்வதில்லை” எனவும், அவர் கூறினார்.

“நேற்றயதினம் கூட சாளம்பைக்குளத்தில் கூட்டத்துக்கான அனுமதி இல்லாமல் கிராமம் ஒன்றுக்ள் சென்று ஊர் மக்களுக்கு அடித்து பலர் வைத்தியசாலையில் இருக்கின்றனர். இப்படியான நிலைகள் வன்னியிலும் வரத்தொடங்கி விட்டன. தேர்தல் அமைப்புகள் இவை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்” எனவும், அவர் தெரிவித்தார்.

இன்று சிறுபான்மைக் கட்சிகள் போட்டயிடும் ஒரு கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி காணப்படுகின்றது. பல சிறுபான்மை தலைவர்கள் இன்று ஒன்றுபட்டிருக்கின்றார்கள். எனவே, எந்த அணியுடன் நின்றால் மக்களின் பிரச்சினைகளூக்கு தீர்வைக் காணலாம் என்பதனை மக்கள் உணர வேண்டும். இந்த மாவட்டத்திலே இருக்கின்ற சவால்களை தீர்க்கக் கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் சொல்லி, நீங்கள் அறியவேண்டிய தேவையில்லை எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .