Freelancer / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு, நாச்சிகுடா பகுதியில் கடந்த சில தினங்களாக, காட்டு யானைகள் இரண்டு மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள பயிர்களை மிதித்து துவசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூசனிக்கொடிகள் பிஞ்சும் காயுமாக உள்ள நிலையில், அழிவுகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் 20க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளையும் முற்றுமுழுதாக அழித்து துவசம் செய்துள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள் வயது முதிர்ந்த நிலையிலும் நிம்மதியாக இரவு வேளைகளில் படுத்துறங்க முடியாத நிலை தொடர்வதாகவும் தமது ஜீவனோபாய பயிர்ச்செய்கைகள்
அழிவடைவது தொடர்பாக மாவட்ட அரச அதிபர், கிராம சேவையாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்திய போதிலும் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார்கள்.
அரசியல்வாதிகளும் தேர்தல்காலத்தில் சொல்வது ஒன்றும் பின்னர் செய்வது ஒன்றாக உள்ளது எனவும் இந்நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் இந்நிலைதொடருமாயின் வாழ்வாதார பயிர்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் கவலை தெரிவித்தார்கள். R
5 minute ago
37 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
37 minute ago
49 minute ago