2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யுவதியின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள கிணற்றில் இருந்து, இன்று (03) யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், விசுவமடு - மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் நிரோஜினி (வயது 21) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

அந்த யுவதி, கடந்த மூன்று நாள்களாகக் காணாமல் போயிருந்த நிலையிலேயே, அவரது வீட்டில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற மண் கிணறு அவர்களின் பயன்பாட்டில் உள்ளதெனவும், இந்தக் கிணற்றில் அவர் தவறுதலாக வீழ்ந்திருக்கலாமெனவும், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .