2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ராஜ்குமார் மீது தாக்குதல்; கண்டிக்கிறார் செல்வம் எம்.பி

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் கட்டிக்காக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைகள், தற்போதைய ஆட்சியாளர்களாலும் அவர்களது ஆதரவாளர்களாலும் தவிடுபொடியாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இவ்வாறான வன்முறைகளைக் கையில் எடுப்பவர்களுக்கு, மக்கள் நல்லதொரு பாடத்தைப் புகட்ட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து, அவர் இன்று (01) விடுத்திருந்த அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .