Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 20 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வாகனத்தின் மூலமே, வடக்குக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டிருப்பதாக, இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் தெரிவித்தார்.
வவுனியா – வெளிக்குளத்தில், இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கடந்த காலங்களில், வடக்கு பகுதியில் பல்வேறு இடங்களிலும் குடியேற்றங்களையும் பள்ளிவாசல்களையும் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான குடியேற்ற பகுதிகளில் இருந்தும் பள்ளிவாசல்களிலும் இருந்துமே, தற்போது வெடிப்பொருள்கள், ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான வெடிப்பொருள்களையும் ஆயுதங்களையும் கொண்டு வருவதானது இலகுவான காரியமல்லவெனவும் கூறினார்.
இவை பாதுகாப்பான முறையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் ஆட்கள் அவருடைய வாகனத்தின் மூலமே, பாதுகாப்பான முறையில் இவை கடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
ஆகவே, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவர் கூறினார்.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago