Freelancer / 2022 ஜூலை 08 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது முச்சக்கர வண்டியில் வந்த மூவர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு - முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விமானப்படையினரின் பாதுகாப்புடன், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்களின் ஒழுங்கு படுத்தலில் டோக்கன் அடிப்படையில் கிராமங்கள் தோறும் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் மேற்கு அம்பலவன் பொக்கணை, ஆகிய கிராம மக்களுக்கு பெற்றோல் வழங்கப்பட்டு வந்த நிலையில், வெளியில் இருந்து திடீரென எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் தமது முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் வழங்குமாறு வற்புறுத்தியுள்ளதை தொடர்ந்து அங்கு வாக்குவாதம் இடம்பெற்று கைகலப்பாக மாறி, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார்,விமானப்படையினர் அங்கு கூடியவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை சாமாளிக்க முற்பட்ட போதும் முச்சக்கர வண்டியினை அங்கிருந்து எடுத்துசென்றுள்ளார்கள்.
சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள். (R)
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Jan 2026
21 Jan 2026