Freelancer / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி - வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால், குறித்த இடம் தீக்கிரையாகியுள்ளது.
மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்களுக்கு சேதம் ஏற்பட்ட போதும் அன்றைய தினம் மருத்துவசேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸாரும், தடயவியல் பிரிவினரும் மற்றும் பிராந்திய சுகாதார சேவையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (R)
31 minute ago
35 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
4 hours ago
9 hours ago